ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகள் சார்பாக தீர்மானங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டினை எடுப்பதற்கான முயற்சியாக கொழும்பில் இன்று மாலை 6 மணியளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசு கட்சியின் தலைவர்
மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன் அக்குழு தொடர்ந்து கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது