2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு  சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

இதற்கமைய, ஆணைக்குழுவின்www.election.gov.lk  என்ற உத்தியோகபூர்வ  இணையத்தளத்தில் பிரவேசிக்குமாறு பொதுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அறிந்தால், உடனடியாக உங்களது கிராம அலுவலரிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லையாயின் 0112860031 அல்லது  0112860032 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.