இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,248 ஆக பதிவாகியுள்ளது. COVID -19 தொற்றுக்குள்ளான 521 பேர் நேற்று (06) அடையாளம் காணப்பட்டனர்.

தொற்றுக்குள்ளானோரில் 7,006 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 39,023 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டன.

அதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

தெஹிவளை பகுதியை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அலவ்வ பகுதியை சேர்ந்த 78 வயதான பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.