வெளிநாடுகளில் இருந்து மேலும் 261 பேர் இன்று(08) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 29, கட்டாரில் இருந்து 30, ஜப்பானில் இருந்து 45 மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து 157 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட மேலும் 365 பேர் இன்று நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 159 பேர் யுக்ரேனில் இருந்து வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

மாலைத்தீவில் இருந்து 30 பேர், இத்தாலியில் இருந்து 32 பேர், பங்களாதேஷில் இருந்து 10 பேர், மலேசியாவில் இருந்து 5 பேர், தென்னாபிரிக்காவில் இருந்து 35 பேர், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 75 பேர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து 19பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 78 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 5782 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  கொரோனா ஒழிப்பு தேசிய மத்திய நிலையில் கூறியுள்ளது.