அம்பாறை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலையையடுத்து, நகரப் பகுதியில் உள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படமாட்டாதென, அம்பாறை வலய கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, அம்பாறை வலய கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.