மலர்வு – 1948.08.25 உதிர்வு – 2021.01.10

வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், பீடியாபாம் செட்டிக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் (தலைவர் மரியதாஸ்)
அவர்கள் நேற்று (10.01.2021) ஞாயிற்றுக்கிழமை  காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகிறோம்.

இனப்பற்றும், தமிழ் பற்றும் தமிழ்மக்களின் அரசியலில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட இவர் ஆரம்ப காலங்கள் முதல் தனது வாழ்வின் இறுதிக் காலங்கள் வரை  கழகத்தின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளித்து, உறுதுணையாய் நின்று பல உதவிகளையும் வழங்கியதுடன் கழகத்தின் பணிகள் சிறப்புற அறிவுரைகளும் வழங்கி வந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
11.01.2021.