நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(10) அடையாளம் காணப்பட்ட 543 பேரில் 217 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கொவிட் இரண்டாவது அலையின் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,980 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பொரலை பகுதியில் 69 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹாவில் 85 பேரும், இரத்தினபுரியில் 40 பேரும், காலியில் 26 பேரும், கண்டியில் 13 பேரும், ஹம்பாந்தோட்டையில் 10 பேரும், மட்டக்களப்பில் 09 பேரும், களுத்துறையில் 08 பேரும், திருகோணமலையில் 08 பேரும், மாத்தறையில் 06 பேரும், குருநாகலில் 06 பேரும், மாத்தளையில் 06 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.