நேற்றைய தினம் (11) மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன் பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இராஜகிரிய பகுதியை சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், மட்டக்குளி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர், கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 51 வயதான ஆண் ஒருவர், பண்டாரகமவை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர்,  காத்தான்குடியை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 52 வயதான ஆண் ஒருவர் அடங்கலாக 08 கொரோனா மரணங்கள் நேற்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளன.