பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இதற்கமைவாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீரப்பளிக்கப்பட்டுள்ளது.