2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா இல்ஹா ஹசீனா மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய மொஹம்மட் அசான் மொஹம்மட் முபாரக்கின் மனைவி உள்ளிட்ட 12 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் பிரியந்த லியனகே விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லையென்பதுடன், Skype தொழில்நுட்பத்தினூடாக நீதவான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு நீதவான் இதன்போது விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.