மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று,

இன்று புதன்கிழமை (13) அதிகாலை வெளியான பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் செய்யப்பட்ட 132 பிசிஆர்  பரிசோதனையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும் வெல்லாவெளி சுகாதாரப் பிரிவில் மூவருக்குமாக 12 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.