மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை, இன்றிலிருந்து (13) மீண்டும் முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வரை ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.