பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணிக்குழுவைச் சேர்ந்த 463 பேருக்கு இன்று(13) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சபாநாயகரும் பிசிஆர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறவிருந்த பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தை, எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

இதன்போதே, 19 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு குறித்த முடிவு எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.