கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர், இன்று(15)அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,219ஆக அதிகரித்தது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 512 பேர் இன்று(15) குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 44,259 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 6 ,709 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.