வெளிநாடுகளில் இருந்து மேலும் 109 இலங்கையர்கள் இன்று(15) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து 28 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 44 பேரும் ஜப்பானில் இருந்து 37 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஜேர்மன், மாலைத்தீவுகள், இத்தாலி மற்றும் பங்களாதேஷில் இருந்து மேலும் சிலர் நாட்டுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 6790 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.