மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 15 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இதுவரை 440 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சுகாதார வழிகாட்டல்களை மக்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது யாழ். மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டல்களை அலட்சியம் செய்யாது உரிய வகையில் சமூக இடைவௌியைப் பேணி தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், சுகாதார நடை முறைகளை பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.