முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23´9″ ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அதிகளவான இராணுவத்தினரின் பிரசன்னத்தோடு இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வமான நிகழ்வில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி, முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.