முப்படைகளில் இருந்து சட்ட ரீதியாக விலகிய 200 பேரை சிறைச்சாலை காப்பாளர்களாக உடனடியாக இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

40 வயதிற்கு குறைந்தவர்களை குறித்த பதவிக்காக இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம் பத்திரிகைகள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

போகம்பர சிறைச்சாலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.