வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு இன்று (16) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில், வவுனியா, குருமன்காடு பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களை சேர்ந்த நால்வருக்கு தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் மொத்தமாக இதுவரையில் 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.