இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணமொன்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதுல்கோட்டே பகுதியை சேர்ந்த 82 வயதான பெண்ணொருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளராக அடையாளங்காணப்பட்டதை அடுத்து, தேசிய தொற்றுநோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

COVID தொற்றுடன் ஏற்பட்ட உக்கிர இருதய நோயால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் மேலும் 715 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொத்தணியிலிருந்தும் சிறைச்சாலையிலிருந்தும் இவர்கள் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 52 ,313 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 487 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 44 ,746 ஆக அதிகரித்துள்ளது.