யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் இன்று (18) கடற்படைக்கு அபகரிப்பதற்காக பொது மக்கள் காணியை அளவீடு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

காணி அளவிடப்படவுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் மக்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று காலை 8.30 மணிக்கு மண்டைதீவில் திரண்டு வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.