மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 61 ஆசிரியர்களுக்கே இவ்வாறு நியமனம் வழக்கி வைக்கப்பட்டது.

குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு மடு வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமையில் காலை 9.30 மணிக்கு மடு வலய கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.