இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்முடன் தொடர்புகளை பேணிய அனைவரையும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் தனது Facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.