இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் பேருக்கு அடுத்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (19) ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

50 வீதமானோருக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், தற்போது 4 வகையான தடுப்பூசிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.