வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதியோரத்தில் ஆணொருவர் உயிரிழந்த நிலையில், இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவரே, நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் வீதியோருத்தில் உள்ள வெள்ள நீரில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இடத்துக்கு தடவியல் பிரிவு வரவழைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.