கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக இன்று (21) திறக்கப்பட்டன.

கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் விமான நிலையங்கள் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

ஆனைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து சுற்றுலாப்பயணிகளுக்கு இன்று முதல் இலங்கை வருவதற்கு வாய்ப்பு கிடைப்பதாக விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்தார்.

விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட சுகாதார வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகளின் ஊடாக நாட்டிற்குள் கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பாதுகாப்பு முறைமைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் 19 பரவலின் முதலாவது அலை காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றாலப்பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.