போலியான சாட்சியங்களை தயார்படுத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைதான குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பதில்  நீதவான் மஹேஸ் ஹேரத் முன்னிலையில் இன்று(21) வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, இவர்கள் மூவரையும் அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.