விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக தமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகளுக்கு வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.