திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறைகளுடன் மோதுண்டுள்ளதாக இலங்கை கடற்படை இன்று (23) பிற்பகல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக் கடற்படையின் இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் செய்தித் தொடர்பாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

சின்ன இராவணா கோட்டைக் கடல் பகுதியான அங்கு, பவள மற்றும் பாறைகளின் நீண்ட பகுதி உள்ள நிலையில், நிலைமையை மதிப்பிடுவதற்கும் கடல் சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை அறியவும் இவ்வாறு கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.