சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி, அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுதினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அம்மன் கோவில் கேணி உள்ள காணியை அபகரிக்க முயற்சிக்கிறார்களா என்கிற சந்தேகம் ஊர்மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

குறித்தக் கோவிலுக்கு நேற்று (22) மாலை வந்த சிலர் தங்களை இராணுவத்தினரென அடையாளப்படுத்திக்கொண்டு, கோவில் காணிகள் தொடர்பில் அங்குள்ள பூசகரிடம் விசாரித்துள்ளனர்.

இதுத் தொடர்பில் இன்று (23) பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.