தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE). ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF).

எமது மக்களின் உரிமைக்காக உணர்வுடன் செயல்பட்ட தோழர் ஜெமினியை இழந்துள்ளோம்.

தோழர் ஜெமினி இறந்த செய்தி கேள்வியுற்றதும் அதிர்ச்சியுற்றேன் . இன்னும் பல ஆண்டுகள் வாழக்கூடியவயதில் அவருக்கு இறப்பு ஏற்பட்டது எனக்கு ஆழ்ந்த கவலையளிக்கின்றது. நான் 1990ஆம் ஆண்டு ஜெர்மணிநாட்டுக்கு சென்ற பொழுது முதல் தடவையாக அவரை சந்தித்ததோடு ஒரு வாரம் அவருடனும் தோழர் சிவபாலன்உடனும் தங்கியும் இருந்தேன். அந்த நாட்களில் எமது மக்களினதும் நாட்டினதும் எதிர்காலம் குறித்து பேசியபொழுது , அவர் எமது மக்களின் விடுதலை குறித்து அதீத அக்கறை கொண்டிருந்தமையினை என்னால்அவதானிக்க முடிந்தது.

பின்னர் நான் ஜெர்மனிக்கு சென்ற வேளைகளில் எல்லாம் அவரை சந்தித்து இருக்கின்றேன். தோழர் ஜெமினிஒரு எளிமையான மனிதராகவும், பொதுவுடமை மற்றும் இடதுசாரி சிந்தனைகளில் ஈர்ப்பு உடையவராகவும்இருந்தார். மக்கள் மத்தியில் ஜனநாயகம், பன்முகத்தன்மை, கருத்து சுதந்திரம், மாற்றுக் கருத்துக்களுக்கானமதிப்பு உரிமை போன்றவற்றிக்காக இரண்டு சகாப்தங்களாக போராடி வந்திருக்கின்றார்.

இதற்காக அவர் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும் , அவர் கொண்டிருந்த கொள்கையில் இருந்து ஒருபோதும் விலகி சென்றது இல்லை. அவர் நடத்தி வந்த தேனீ இணைய தளத்தின் ஊடாக அவர் தனது ஊடகபணியினை தொடர்ச்சியாக மேற்கொண்டே வந்தார். தோழர் ஜெமினி இலங்கை அரசியல், சமூகபிரச்சனைகளை மிகவும் அக்கறையுடன் தொலைபேசி வாயிலாக என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டுஅறிவது உண்டு. நானும் பல முறை அவருடன் தொடர்பு கொண்டு இங்கு நடைபெறும் விடயங்களைதெரியப்படுத்தி வந்திருக்கிறேன்.

அத்துடன் எங்களுடைய ஜெர்மன்கிளை தோழர்களின் வேண்டு கோளுக்கு இணங்க துண்டு பிரசுரங்கள்தயாரித்து கொடுத்ததுடன் சில சந்தர்ப்பங்களில் நிதி உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்.

இவ்வாறான ஒரு நல்ல தோழரின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கு ஒர் இழப்பு ஆகும். அவரின்இறப்பினையுற்று கவலையுற்றிருக்கும் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கும் எனதுசார்பிலும் எமது கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம் .

த.சித்தார்த்தன். பா.உ,
யாழ் மாவட்டம்.
தலைவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.

Tamil Eelam People’s Liberation Organization (PLOTE) .

Democratic People’s Liberation Front.(DPLF)

We have lost Comrade Gemini who acted consciously for the rights of our people.

I was shocked to hear the news of Comrade Gemini’s death. I am deeply concerned that he died at an age when he could still live for many years. I met him for the first time when I went to Germany in 1990 and stayed with him and Comrade Sivapalan for a week. Speaking of the future of our people and country in those days, I could see that he was deeply concerned about the liberation of our people.

Since then I have met him every time I went to Germany. Comrade Gemini was a simple man and attracted to socialism and left-wing thinking. He has fought for two decades , for democracy, diversity, freedom of expression and the right to value alternative ideas among the people. Despite threats against him for this, he never deviated from the policy he had. He continued his media career through the THENEE website he ran. Comrade Gemini is very concerned about Sri Lankan political and social issues by contacting me over the phone. I have also been in touch with him many times and have been informed of the things that are going on here.

He also produced leaflets at the request of our German branch comrades and in some cases provided financial assistance.

The loss of such a good comrade is a loss not only to us but also to the Tamil community. On behalf of myself and our party, I extend my deepest condolences to his wife, relatives, friends and comrades who are mourning his death.

Thus

D. Siddharthan. M.P, Jaffna District.

Leader of PLOTE, DPLF.