மலர்வு- 25.12.1925 உதிர்வு-24.01.2021

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா இராசம்மா  அவர்கள் நேற்று (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம்  மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி)  மத்திய குழு உறுப்பினரும், பொருளாளரும், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான திரு. கந்தையா சிவநேசன் (தோழர் பவன்) அவர்களின் அன்புத் தாயார் ஆவார்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக்  கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
25.01.2021

தொடர்புகட்கு: 0777588910 ( பவன்)