கொரோனா வைரஸின் நேற்றைய (24) நிலவரப்படி, கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு, வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், நேற்று பதிவு செய்யப்பட்ட 843 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில், 480 பேர், கொழும்ப மாவட்டத்திலேயே பதிவ செய்யப்பட்டுள்ளனர் என்றும் இது, கொழும்பு மாவட்டம் ஆபத்தான கட்டத்தில் இருப்பதையே காட்டுவதாகவும் சங்கத்தின் ஆசிரியர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் பதிவு செய்யப்பட்ட 480 நோயாளர்களில், 200 – 250 பேர், கொழும்பு மாநகர சபைக்குடம்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த வயைில், நாரஹேன்பிட்ட 29, மருதானை 20, கிராண்பாஸ் 15, மட்டக்குளிய 15 மற்றும் கோட்டை 11 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அவிசாவளை – 16, தெஹிவளை – 19, கொத்தட்டுவ – 21, கல்கிசை – 29, ரனேல – 16, பிலியந்தலை – 12, வெள்ளம்பிட்டிய – 29, மஹாரகம – 19 என்று நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.