கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில், மேலும் நால்வர் மரணித்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து கொரோனா தொற்றின் மரணம் 287 ஆக அதிகரித்துள்ளது.

​நேற்றைய அறிக்கையின் பிரகாரம் மரணமடைந்த நால்வரில் இருவர் பெண்களாவர். அதில் 43 வயதான பெண் தெரணிய​கலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அந்தப் பெண், ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஜனவரி 24 ஆம் திகதியன்று மரணமடைந்தார் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 வயதான மற்றைய பெண், பேருவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார். மஹரகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அப்பெண், ஜனவரி 25ஆம் திகதியன்று மரணமடைந்துள்ளார்.

ஏனைய இரண்டு ஆண்களில் ஒருவர் வரகாகொட பிர​தேசத்தையும் மற்றையவர் கொழும்பு-08 ஐச் சேர்ந்தவரும் ஆவார்.