கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதால், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்துமாறு, கல்வி அமைச்சு சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, இதற்கு தீர்வாக கொழும்பு மாவட்டத்தில் கல்வி கற்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் அருகில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியம் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.