இன்று ((26) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 737 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி தெரிவித்துள்ளது.

இவர்களுள் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 227 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 96 பேரும் கண்டி மாவட்டத்தில் 47 நபர்களும் கேகாலை மாவட்டத்தில் 26 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 18 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 12 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 7 பேரும் பதுளை மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை வரையில் நாட்டில் மொத்தமாக 59,167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 50,337 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய தினம் (25) 4 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

தெரணியகலை, வரக்காகொடை, கொழும்பு – 8 மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 287 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் 14,799 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.