இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட நிலையில் அதன் அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த பரிசோதனை அறிக்கையில் தனக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது பாராளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்