வௌிநாடுகளில் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழும் இலங்கையர்களை அரச அனுசரணையுடன் நாட்டிற்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, விமான பயணச்சீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அரச தரப்பில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரால் துறைசார் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர, சலுகைக் கட்டண அடிப்படையில் அவர்களுக்கான விமான பயணச்சீட்டுகளை விநியோகிக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.