நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள சுகாதார துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பாதுகாப்புத் தரப்பினருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் இதற்கான நடவடிக்கை ஆரம்பமாகும் என, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்காக பொதுமக்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.