நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 62,445 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்றுக்குள்ளான 6 ,742 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் COVID-19 தொற்றுடன் தொடர்புடைய மேலும் 8 மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் நால்வரும் ஆண்கள் நால்வரும் இதில் அடங்குகின்றனர்.

பாணந்துறை, காலி, களுத்துறை, மொரட்டுவை, பிலியந்தல, சாய்ந்தமருது மற்றும் இரத்தினபுரியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் COVID மரணங்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 55,398 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.