யாழ் திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்திற்கான முகப்புக் கட்டிடம் இன்று முற்பகல் 10.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

திரு மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத்

தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்புரை என்பன இடம்பெற்று சனசமூக நிலையத்திற்கான முகப்புக் கட்டிடம் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மலைகளின் மங்கல இசை நிகழ்ச்சியும் சிறப்புற இடம்பெற்றது.