மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்  அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக நேற்றையதினம் (30.01.2021) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது  காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், மறவன் புலோ சச்சிதானந்தம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம்,  பேராசிரியர்  சண்முகதாஸ்,  யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காந்தியின் ஞாபகார்த்தமாக காந்தீயம் என்ற பத்திரிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார் .