ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வினவப்பட்டது.

இதன்போது, இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர்,
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

ஏற்கனவே காணொளிகள் பல வேறு நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதை தம்மால் நிரூபிக்க முடிந்ததாக கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை தம்மால் பொதுவாகக் கூற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகளில் அரசாங்கங்களுக்கு அரசியல் தேவைகள் உள்ளன. உதாரணமாக டொரன்டோவில் இலங்கையர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை. லண்டனில் முக்கிய பதவியாக மேயரை நியமிப்பதற்குத் தேவையான அரசியல் பின்புலம் இலங்கையுடன் தொடர்புடையது. இவை குறித்து நாம் அறியாமல் இல்லை. போதுமானளவு பதிலளிப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்

என கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.