கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி கராபிடிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

32 வயதுடைய கயான் தன்தநாராயன என்ற குறித்த வைத்தியர் ராகம வைத்தியசாலையில் சேவை புரிந்து வந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காலி கராபிடிய  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்