வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு வருடங்களாக போராடியும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று (02) முதல் 6 ஆம் திகதி வரை சுழற்சி முறையில் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் இணைப்பாளர் க.கோகிலவாணி குறிப்பிட்டார்.

தமது உறவுகள் கிடைக்கும் வரை தமக்கு சுதந்திர தினம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.