கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் இருந்து தொலைபேசிகள் 5, பெட்டரிகள் 11, சிம் அட்டைகள் 10 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (04) இரவு 8.45 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கேகாலை சிறைச்சாலையின் A4 பிரிவின் விஷேட சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 3 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.