நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் நேற்று முன்தினம் காலை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பினரது பல தடைகளையும் தாண்டி நேற்று மாலை  திருகோணமலை நகரில் நிறைவடைந்தது.

திருகோணமலை சிவன் ஆலயம் முன்பாக இன்றுகாலை 8.30 மணியளவில் மீண்டும் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பினரது தடைகள்,  காடையர்களது பல தாக்குதல்களையும் தடைகளையும் தாண்டி முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்துள்ளது.

திருமலை சிவன் ஆலயம் முன்பாக பேரணி ஆரம்பமானபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எல்லாளன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அசோக்  உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலரும் பேரணியில் இணைந்து  கொண்டிருந்தார்கள்.