பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி, எதிர்வரும் 7ஆம் திகதியன்றே, யாழ்ப்பாணத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணி, மூன்றாவது நாளான இன்று (5) திருகோணமலை நகரிலிருந்து முல்லைத்தீவு சென்றுள்ளது.

நாளை 6ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் வைத்து பேரணியை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் நாளை 6ஆம் திகதி வரை போராட்டங்களை நடத்த நீதிமன்றங்களின் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது மேலும் ஒரு நாள் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை மறுதினம் 7ஆம் திகதியன்றே, இந்தப் பேரணி யாழ்ப்பாணத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.