நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பினரது பல தடைகளையும் தாண்டி நேற்றிரவு  வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு அண்மையாக  நிறைவடைந்தபோது பேரணியை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், நகரசபை உறுப்பினருமான சு.காண்டீபன், அருண் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் வரவேற்றிருந்தனர்.

இன்று காலை மீண்டும் ஆரம்பமான பேரணி வவுனியா நகரை வலம் வந்து மன்னார் நோக்கி புறப்பட்டது.

இன்று காலை பேரணி ஆரம்பமானபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் வே.குகதாசன்(குகன்), த.யோகராஜா(யோகன்), சு.காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஹரிஹரன், சுஜீபன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்,  கட்சி ஆதரவாளர்கள் என பலரும் பேரணியில் இணைந்து கொண்டிருந்தார்கள்.