நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்கின்ற விடயம், மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும் கண்டித்தும்

சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவுடன் பொத்துவிலில் ஆரம்பமான பேரணி பாதுகாப்பு தரப்பினரது பல தடைகளையும் தாண்டி நேற்றிரவு 7.15 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.

பேரணி யாழ் நோக்கி செல்வதற்காக இன்று காலை 8.00 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமானபோது புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா கஜதீபன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மத்திய குழு உறுப்பினரும், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளருமான வே.சிவபாலசுப்ரமணியம்(மணியம்), கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கௌதமன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கிஷோர், கட்சி உறுப்பினர்கள், கட்சி சார்பில் பெருமளவு இளைஞர்கள் இணைந்து கொண்டிருந்தார்கள்.